நடந்தது உண்மையா? பொய்யா?
டிவிட்டரை பெரிய தொகை கொடுத்து வாங்கிய எலான் மஸ்க், டிவிட்டரில் அதிநவீன வசதிகள் செய்து தரும் பணிகளை தொடங்கியிருக்கிறார். இந்தநிலையில் டிவிட்டரில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி 54 லட்சம் பயனர்களின் தரவுகள் திருடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது அந்த தரவுகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் டிவிட்டர் குறித்த புள்ளி விவரத்தையும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்காத பிற பயன்பாட்டாளரின் தனித்தகவல்கள்,போன் நம்பர் மற்றும் மின்னஞ்சல்கள் ஹேக் செய்யப்பட்டு
விற்பனை செய்யப்படுவதாகவும் இணைய பத்திரிகை ஒன்று தகவலை வெளியிட்டிருக்கிறது. டிவிட்டரில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது குறித்து டிவிட்டரிலேயே தகவலை வெளியிட்டவரை டிவிட்டர் நிறுவனம்.பணிநீக்கம் செய்துள்ளது
இத்தனை பெரிய பணம் கொடுத்து குறைபாடுள்ள மென்பொருளை வாங்கிவிட்டோமோ என மஸ்க் தற்போது வருத்தப்படுவதாக தகவல் கசிந்துள்ளது மொத்தம் 54 லட்சம் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ள நிலையில் மொத்தம் 1கோடியே 70 லட்சம் தரவுகள் கசிந்திருப்பதாகவும் புதிய அதிரவைக்கும் தகவல் கிடைத்திருக்கிறது.