டெபாசிட் சரிவு தற்காலிக காரணம்தானாம்…
பாரத ஸ்டேட் வங்கியின் தலைவரான தினேஷ் குமார் காரா அண்மையில் தங்கள் வங்கிகளில் உள்ள டெபாசிட் சரவு குறித்து பேசியுள்ளார். டெபாசிட்கள் சரிவு என்பது ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் அந்த பணம் காப்பீடாகவோ, பரஸ்பர நிதியாகவோ மாறுகிறது என்று தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். நிதி பற்றாக்குறை சரிவு என்பது நம்பும்படியான இலக்காக உள்ளதாக தினேஷ் குறிப்பிட்டார். உள்கட்டமைப்புகளின் மீது தனியார் முதலீடுகளும் அதிகரிக்கும் என்பதாக தினேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் வளர்ச்சியில் தனியார் பங்களிப்பும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டெபாசிட்டோ, பரஸ்பர நிதியோ, எதுவாயினும் அது தேசத்தின் வளர்ச்சிக்கு பயன்படுவதாகவும் தினேஷ் குறிப்பிட்டார். அனைத்து வகை துறைகளும் சீரான வளர்ச்சியை அடுத்த 6 முதல் 7 ஆண்டுகளுக்குள் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு இல்லாத கடன்கள் முன்பை விட அதிகம் திரும்பப்பெறப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அனைவருக்கும் கடன் தருவதில்லை என்று கூறிய தினேஷ், சம்பள கணக்கு உள்ளோருக்குத்தான் தனிநபர் கடன் வழங்குவதாகவும், வளர்ச்சியை மட்டுமே ரிசர்வ்வங்கி கணக்கில் கொள்வதாகவும் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி தினேஷ் குறிப்பிட்டுள்ளார்.