சரிந்து கொண்டே இருக்கிறது!!! என்ன தெரியுமா???
இந்தியாவின் ஏற்றுமதி திறன் கடந்தாண்டை ஒப்பிடுகையில் செப்டம்பரில் குறைந்துள்ளது.கடந்தாண்டு செப்டம்பரில் இந்தியாவின் ஏற்றுமதி அளவு 33.81 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஆனால் அது தற்போது 32.62பில்லியன் அமெரிக்க டாலர்களாக சரிந்துள்ளது.
வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாட்டில் இறங்குமதி அளவு கணிசமாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டு செப்டம்பரில் 56.29 பில்லியன் டாலராக இருந்த இறக்குமதி அளவு தற்போது மேலும் அதிகரித்து 59.35பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இந்த அளவு கடந்தாண்டைவிடவும் 5.44%அதிகமாகும்.ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மொத்தமாக பார்த்தால் இந்திய ஏற்றுமதி 15% உயர்ந்துள்ளது.
இதேபோல் இறக்குமதியின் அளவும் கணிசமாக உயர்ந்துள்ளது.ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் ஏற்றுமதி அளவு 229பில்லியனாகவும், இறக்குமதியின் அளவு 378.53 பில்லியன் டாலராகவும் அதிகரித்துள்ளது.
டிரேட் டெபிசிட் எனப்படும் வர்த்தக பற்றாக்குறை அளவு கடந்தாண்டு இருந்ததைவிட கிட்டத்தட்ட இருமடங்காகியுள்ளது. அதாவது கடந்தாண்டின் முதல் அரையாண்டில் வர்த்தக பற்றாக்குறை 76.25பில்லியன் டாலர்களாக இருந்தது.இது தற்போது 149.47 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.