விட்டா மாச மாசம் விலை ஏத்துவாங்க போல இருக்கே!!!
பேசஞ்சர் வெஹிகல் எனப்படும் பயணிகள் வாகனங்களின் விலையை உயர்த்த டாடா நிறுவனம் முடிவெடுத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விலை ,நாளை முதல் அமலுக்கு வருகிறது. புதிய விலை பூஜ்ஜியம் புள்ளி 9 விழுக்காடு வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை ஒவ்வொரு மாடலுக்கும் வேறுபடும் என்றும்,டாடா நிறுவன பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது உள்ளீட்டு மற்றும் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதனால் விலை ஏற்றுவதாக டாடா குழுமம் அறிவித்துள்ளது மார்ஜினல் விலை கடந்த ஜூலை மாதம் 55%அதிகரிக்கப்பட்டது. டியாகோ, பஞ்ச்,நெக்சான்,ஹாரியர்,மற்றும் சஃபாரி ஆகிய வகை கார்கள் விலையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் மாதத்தில் மட்டும் டாடா நிறுவனம் 78,335 கார்களை விற்றுள்ளது..கடந்தாண்டு 67,829வாகனங்கள் மட்டுமே விற்கப்பட்டன. இந்த அளவு கடந்தாண்டை விட 15.49% கூடுதலாக விற்கப்பட்டன. கடந்தாண்டு 34,155 மின்சார கார்கள் மட்டுமே விற்கப்பட்டதாகவும், இந்தாண்டு 45,423 மின்சார கார்கள் விற்கப்பட்டுள்ளன வெளிநாடுகளுக்கு விற்கப்படும் மின்சார கார்களின் எண்ணிக்கை 10 விழுக்காடு குறைந்துள்ளதாகவும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.