இப்படி வம்பு இழுக்கறதே இவருக்கு வேலையா போச்சு!!!
டெஸ்லா நிறுவனத்தின் முதலாளியான எலான் மஸ்க் தனது முழு கவனத்தையும் தற்போது புதிதாக வாங்கிய டிவிட்டர் நிறுவனத்தில் செலுத்தி வருகிறார். டிவிட்டரில் 3-ல் 2 பங்கு ஊழியர்களை அதிரடியாக நீக்கிய மஸ்க் எஞ்சியிருக்கும் பணியாளர்களுக்கும் சலுகைகளை படிப்படியாக குறைத்துள்ளார். வீட்டில் இருந்து பணியாற்றிய ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த இலவச இணைய வசதி,டீமுடன் சென்று வெளியே சாப்பிடும் செலவு, டிரெய்னிங்கிற்கு ஆகும் செலவுகளை முற்றிலுமாக மஸ்க் துண்டித்துள்ளார். அலவன்ஸ் எனப்படும் கூடுதல் தொகை மட்டும் நிறுவனத்தின் நிதி நிலைமை சீரானதும் பார்க்கலாம் என்று மஸ்க் தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி ஏற்கனவே நடைமுறையில் உள்ள டிரைக்ட் மெசேஜ் வசதியில் சேட்டிங் செய்வது குறித்தும் அதில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தவும் கிடிக்கிப்பிடி போட்டு வருகிறார். ஏற்கனவே பணியில் இருந்த ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்ட எலான் மஸ்க்,புதிதாக பணியாளர்களை
பணியில் அமர்த்தி வருகிறார். திறமையான பணியாளர்கள் இருந்தால் கூறும்படியும் தற்போதுள்ள ஊழியர்களை
மஸ்க் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் பொறியியல், விற்பனைப் பிரிவிலும் ஆட்கள் தேவைப்படுவதாகவும் மஸ்க் தெரிவித்துள்ளார்.