மந்த நிலையை நோக்கிச்செல்லும் ஜப்பான்..
சுறுசுறுப்புக்கு பெயர் பெற்ற ஜப்பான் நாட்டு மக்களுக்கு சோகமான செய்தி இது. அந்நாட்டு பொருளாதாரம் மிகமோசமான அளவை இரண்டாவது காலாண்டில் எட்டியுள்ளது. உள்ளூர் தேவைகள் சரிவே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. மோசமான நிலையை எட்டியுள்ளதால் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற பெருமையையும் ஜப்பான் இழக்கிறது. இந்த இடத்தை தற்போது ஜெர்மனி பிடித்துள்ளது. ஜப்பானில் கூலி உயர்த்தவும் ,ஊக்கத் தொகை அளிக்கவும் ஜப்பான் வங்கி திட்டமிட்டு இருந்த நிலையில் அது கிடைக்குமா என்ற கவலையில் மக்கள் உள்ளனர். அந்நாட்டில் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்த பாதிப்பு பெரிதாக கூறப்படுகிறது. மக்கள் பொருட்கள் நுகர்வு சரிந்ததும், சந்தை முதலீட்டு அளவு குறைந்ததும் இந்த நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது. ஜப்பானின் பணியாளர் சந்தையிலும் பெரிய தொய்வு காணப்படுகிறது. அந்நாட்டு மத்திய வங்கியான BOJ இது தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கி,ஏப்ரல் மாதத்தில் சில சலுகைகளையும் அளிக்க ஜப்பான் வங்கி திட்டமிட்டுள்ளது.