கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவன பங்குகள் உயர்வு..
தென்னிந்தியாவில் பிரபல நகைக்கடைகளில் ஒன்றாக திகழ்வது கல்யாண் ஜூவல்லர்ஸ். இந்த நிறுவனத்தின் பங்குகள் வியாழக்கிழமை 4 விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. மேலும் இதுவரை இல்லாத உச்சமாக அந்நிறுவன பங்குகள் 683.15 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இந்த நிறுவன பங்குகள்விலை 8 மடங்கு உயர்ந்துள்ளன.
இன்னும் 19 விழுக்காடு வரை கூட விலை உயர வாய்ப்பிருப்பதாக எச்எஸ்பிசி நிறுவனம் கணித்துள்ளது. 810 ரூபாய் வரை கூட இந்த பங்குகள் செல்ல வாய்ப்புள்ளதால் , இந்த பங்குகளை வாங்குவதில் தவறில்லை என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிறுவனத்தின் 63லட்சம் பங்குகள் ஏற்கனவே விற்றுத்தீர்ந்துள்ளன. டாடாவின் டைட்டன் நிறுவனம்தான் கல்யாண் ஜூவல்லர்ஸ்க்கு போட்டியாக உள்ளது. கல்யாண் ஜூவல்லர்ஸின் புரோமோடர்ரான திரிக்கூர் சீதாராம ஐயர் கல்யாணராமன் அண்மையில் அந்நிறுவனத்தின் 2.36% பங்குகளை வாங்கியிருந்தார். வலுவாக இந்த நிறுவனம் வளர்ந்து வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.