கடுமையான மின்வெட்டால் பொருளாதார சிக்கல் – சீன
சீன நாட்டின் தென்மேற்கில் கடுமையான வெப்ப அலையால் ஏற்பட்டுள்ள மின்வெட்டால் பல பொருளாதார சிக்கல்களை சீனா எதிர்கொள்கிறது. இதன் காரணமாக, பல தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது மின்சாரத்தைச் சேமிக்க தொழில்துறை உற்பத்தியை நிறுத்த சீன நிர்வாகம் கட்டாயப்படுத்தியுள்ளது. இதனால் ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி, டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன், வோக்ஸ்வாகன் மற்றும் டெஸ்லாவின் பேட்டரி சப்ளையரான CATL ஆகியவற்றை இந்த முடிவு பாதிக்கும்.
ஏற்கனவே சோங்கிங் நகரம் வெறிச்சோடிப் போய் இருக்கிறது. சிச்சுவான் மாகாணமும் அதன் ஆலைகளை மூடியுள்ளது,
இதனிடையே சீனாவின் உற்பத்தி ஜூன் மாதத்தில் 50.2 லிருந்து ஜூலையில் 49 ஆக வீழ்ச்சியடைந்திருக்கிறது.
சீனாவின் சில பகுதிகளில் வெப்பம் நிலவி வரும் நிலையில், மற்ற மாகாணங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
நிலைமையை விரைவில் தீர்க்க அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்த சிக்கலை தீர்ப்பது கடினம் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.