அவசரம் காட்டாத எல்ஐசி..
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக திகழும் எல்.ஐசி. நிறுவனம், எச்டிஎப்சி நிறுவனத்தின் பங்குகளை வாங்க அவசரம் காட்டாமல் இருந்து வருகிறது. அண்மையில் எச்டிஎப்சி நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய சரிவுகளை சந்தித்த நிலையில் எல்ஐசி மிகவும் கவனமாக பங்குகளை வாங்கி வருகிறது. 4.8 விழுக்காடு அளவு மட்டுமே பங்குகளை உயர்த்த முடிந்தது. எல்ஐசி அதிகபட்சமாக 52,000 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே பங்குகளுக்கு முதலீடு செய்ய முடிந்தது.
எச்டிஎப்சியில் 9.9விழுக்காடு பங்குகளை எல்ஐசி உயர்த்தும் என எந்த திட்டமும் இல்லை என்று மக்கியூரி கேப்பிட்டல் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு வேளை தேவைப்பட்டால் அடுத்தாண்டு ஜனவரி 24 ஆம் தேதி 9.9விழுக்காடு அளவுக்கு பங்குகளை எல்ஐசி உயர்த்தும் என்று கூறப்படுகிறது. 1.4 விழுக்காடு சரிவை எச்டிஎப்சி நிறுவனம் சந்தித்திருந்தது. மும்பை பங்குச்சந்தையில் 1435 ரூபாயாக முடிந்தது. பங்கு மதிப்பு சரிந்தபோதிலும் அந்நிறுவன லாபம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதாவது செப்டம்பருடன் முடிந்த காலாண்டில் 16,811 கோடி ரூபாய் லாபம் இருந்தது. இதுவே தற்போது 17,258 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. மொத்த சந்தை மூலதனத்தில் 4 விழுக்காடு அளவுக்கு எல்ஐசி முதலீடுகளை செய்திருக்கிறது. இதன் சொத்துமதிப்பு மட்டும் 47.5 லட்சம் கோடிரூபாயாக உள்ளது. இதில் 12 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஈக்விட்டி வகைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாத தரவுகளின்படி எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு 11.89 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறகு. கோல் இந்தியா, எல்அண்ட் டி, பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ் மற்றும் என்டிபிசி ஆகிய நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.