29 ஆண்டுகளில் 18 முறை கோபப்பட்டேன்..
ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவராக இருப்பவர் குமார் மங்கலம் பிர்லா. இவர் கடந்த 29 ஆண்டுகளில் 18 முறை கோபமடைந்திருப்பதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். பீப்பிள் பை wtf என்ற நிகழ்ச்சியில் நிகில் காமத் என்பவரின் கேள்விக்கு இப்படி பதில் அளித்துள்ளார். 1997 முதல் 2009 ஆம் ஆண்டுவரை நடந்த தொலைக்காட்சி தொடர்களில் சிமி கரேவாலின் நிகழ்ச்சியில் பல முறை பேசியுள்ள குமார் மங்கலம் குறித்து நிகில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் கடந்த 29 ஆண்டுகளில் 18 முறைக்கு மேல் கோபப்பட்டு உள்ளதாக கூறினார். அமெரிக்காவில் மிகப்பெரிய இந்திய முதலீட்டு நிறுவனமாக ஆத்திய பிர்லா குழுமம் உள்ளதாக அண்மையில் குமாரமங்கலம் பிர்லா கூறினார். அமெரிக்காவில் 15 பில்லியன் அமெரிக்க டாலர்களை பிர்லாகுழுமம் முதலீடு செய்து 20க்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு பணிகள் நடப்பதாகவும் கூறினார். அமெரிக்காவில் மேலும் முதலீடுகளை செய்ய தங்கள் நிறுவனம் தயாராக இருப்பதாகவும் குமார் தெரிவித்தார். நவீன கால தற்போதைய இந்தியர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும், பெரிதா கனவு கான்பதாகவும், உலக அளவில் முக்கியமான பல பணிகளில் இந்தியர்கள் இருப்பதாகவும், பல துறைகளில் இந்தியர்கள் முன்னோடிகளாக திகழ்வதாகவும் குமாரமங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார்.