மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்குகள் சரிவு..

மஹிந்திரா அன்ட் மஹிந்த்ரா நிறுவன பங்குகள் 6 விழுக்காடு குறைந்து, ஒரு பங்கு 2,666.45 ரூபாயாக விற்பனையானது. கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை அந்நிறுவனம் கண்டுள்ளது. கடந்த 7 ஆம் தேதி 3,197 ரூபாயாக இருந்த பங்குகள் தற்போது 17 விழுக்காடு சரிந்துள்ளது. இந்திய அரசு டெஸ்லா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவிற்குள் அனுமதிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதே மஹிந்திரா நிறுவன சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனத்தின் நிதி சேவை மற்றும் மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் டெவலப்பர் நிறுவனங்களில் உள்ள உரிமைகளை எடுத்துக்கொள்வது குறித்து எம் அன்ட் எம் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளனர். விவசாயத்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதிச்சேவைகள் உள்ளிட்ட துறைகளிலும், புதுப்பிக்கத் தக்க ஆற்றல் விருந்தோம்பல், ரியல் எஸ்டேட் துறைகளிலும் பெரிய சக்தியாக திகழ்கிறது. கடந்த ஓராண்டில் பெரிய ஏற்றத்தை கண்ட மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம், பயணிகள் வாகனமான பி.வி. பிரிவில் மிகவும் கவனமாக பணியை செய்து வருகிறது.
பிப்ரவரி மாதத்தில் கார்களை முன்பதிவு செய்ய மக்கள் மத்தியில் ஆர்வம் குறைந்திருப்பதை பார்க்க முடிகிறது. மின்சார கார்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் 26 நிதியாண்டில் மஹிந்திரா நிறுவனத்தின் பி.வி. பிரிவு பெரிய ஏற்றத்தை காணும் என்றும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.