லேசாக சரிந்து முடிந்த சந்தைகள்

கடந்த வாரத்தில் உயர்ந்து முடிந்த இந்திய பங்குச்சந்தைகள், வாரத்தின் முதல் வர்த்தக நாளில் சரிவை கண்டன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 217 புள்ளிகள் குறைந்து 74ஆயிரத்து 115 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 93 புள்ளிகள் குறைந்து 22ஆயிரத்து 460 புள்ளிகளாகவும் வணிகம் நிறைவுற்றது. Power Grid Corp, HUL, Infosys, SBI Life, Nestle India ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்தை சந்தித்தன.IndusInd Bank, Trent, ONGC, Eicher Motors, Bajaj Auto ஆகிய நிறுவன பங்குகள் சரிவை கண்டன.ஆட்டோமொபைல், உலோகம், பொதுத்துறை வங்கி துறை பங்குகள் 2 விழுக்காடு வரை சரிந்தன. Vedant Fashions, KNR Construction, IndusInd Bank, Astral, Shoppers Stop உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட நிறுவன பங்குகள் கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு சரிவை கண்டன. இதனிடையே சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 64 ஆயிரத்து 400ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிராம் தங்கம் 10 ரூபாய் விலை உயர்ந்து 8ஆயிரத்து 50ரூபாயாக இருக்கிறது. இது மட்டுமின்றி வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் 108ரூபாயாகவும், ஒரு கிலோ 1லட்சத்து 8 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டி வரி 3விழுக்காடும், செய்கூலி மற்றும் சேதாரம் கடைக்கு கடை மாறும் விலையும் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்