தொடரும் சரிவு…
இந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை லேசான வீழ்ச்சியை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 67 புள்ளிகள் வீழ்ந்து 78,472 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 25 புள்ளிகள் சரிந்து 23,727 புள்ளிகளிலும் வணிகம் நிறைவுற்றது. Tata Motors, Adani Enterprises, Eicher Motors, BPCL, ITC ஆகிய நிறுவன பங்குகளின் மதிப்பு ஏற்றம்கண்டன. அதே நேரம் Power Grid Corp, JSW Steel, SBI Life Insurance, Titan Company,SBIஆகிய நிறுவன பங்குகளின் மதிப்பு ஏற்றம் கண்டன. ஆட்டோமொபைல், ஆற்றல், FMCG ஆகிய துறை பங்குகளில் முதலீடுகள் அதிகம் காணப்பட்டன. பங்கு வணிகத்தின் இரண்டாவது பாதியில் லாபத்தை அதிகரிக்க முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால் சரிவு காணப்பட்டது. செவ்வாய்க் கிழமை ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 7090 ரூபாய்க்கும் ஒரு சவரன் 56,720 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு 99 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ 99 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.