புதுப்புது உச்சங்கள் தொடும் சந்தைகள்..
செப்டம்பர் 26ஆம் தேதி வியாழக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 666 புள்ளிகள் உயர்ந்து 85,836 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி211புள்ளிகள் உயர்ந்து 26,216புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. Maruti Suzuki, Tata Motors, Shriram Finance, Grasim Industries ,M&M ஆகிய நிறுவனங்கள் மிகப்பெரிய லாபத்தை பதிவு செய்தன. இதேபோல் ONGC, Cipla, NTPC, Hero MotoCorp, L&T,ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தன. உலோகம், ஆட்டோமொபைல் துறை பங்குகள் 2 விழுக்காடு வரை உயர்ந்த நிலையில்,பொதுத்துறை வங்கிகள், எஃப்எம்சிஜி உள்ளிட்ட துறை பங்குகள் பெரிய சரிவை சந்தித்தன. செப்டம்பர் 26 ஆம் தேதி வியாழக் கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமின்றி, ஒரு சவரன் தங்கம் 56ஆயிரத்து 480 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் 7 ஆயிரத்து 60 ரூபாயாக விற்கப்பட்டது. வெள்ளி விலையும் மாற்றமின்றி ஒரு கிராம் 101 ரூபாயாக விற்கப்பட்டது. கட்டி வெள்ளி விலை கிலோ 1லட்சத்து ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.