ரூ.25,500 கோடி கடன் வாங்கும் அம்பானி..

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடன்களை அடைக்க 25,500 கோடி ரூபாய் கடன் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ரிலையன்ஸ் நிறுவனம், கடன் வாங்குவது குறித்து பல நிறுவனங்களுடன் அம்பானி பேச்சுவார்த்தை நடத்துகிறார். 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் அடுத்தாண்டு கணக்கில் சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டும் 700 கோடி ரூபாய் கடனை அந்நிறுவனம் வாங்கியிருந்தது. இதில் 55 வங்கிகள் பங்கெடுத்திருந்தன. இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்து, அமெரிக்க டாலர்கள் மதிப்பு நவம்பரில் கடுமையாக உயர்ந்த நிலையில் அம்பானி கடனை வாங்க இருக்கிறார். கடந்த வாரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட மூடீஸ் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு பிஏஏ2 சான்றளித்துள்ளது. இது மிகவும் நம்பிக்கை அளிக்கும் குறியீடாகும்.