அமெரிக்க கடன், எச்சரிக்கும் மஸ்க்..
உலகின் மிகப்பெரிய பணக்காரரும், அமெரிக்க அரசின் புதிய துறையில் பதவியேற்றுள்ளவருமான எலான் மஸ்க் அமெரிக்க கடன் தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜோ ரோகன் என்பவருடன் நேர்காணலில் பங்கேற்ற மஸ்க், அமெரிக்க கடன் 36.17 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். துரிதமான நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக கூறியுள்ள அவர், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அமெரிக்க டாலர் மதிப்பு முற்றிலுமாக சிதைந்துவிடும் என்றும், அமெரிக்காவே திவாலாகிவிடும் என்றும் கூறியுள்ளார். அரசின் வருமானத்தில் 23% பணம் வட்டி கட்டுவதற்கே சரியாகிவிடுவதாகவும், சரியாக பயன்படுத்தாவிட்டால் மொத்த அமெரிக்க பட்ஜெட்டும் வட்டி கட்ட மட்டுமே பயன்படும் என்றார். சமூக பாதுகாப்பு, மருத்துவ சதிக்கு எந்த நிதியும் ஒதுக்க முடியாமல் போகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 2024 நிதியாண்டில் மட்டும் அமெரிக்க அரசு 1.12டிரில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை வட்டிக்காக மட்டுமே செலவு செய்துள்ளதாக கூறினார். எலான் மஸ்கின் இந்த கருத்துக்கு பிரபல நிறுவனமான ஜே.பி. மார்கன்நிறுவன அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய வேண்டும் என்றும், பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். டெஸ்லா ஆப்பிள் போன்ற வலுவான நிறுவனங்களில் முதலீடு செய்யவும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இது மட்டுமின்றி தங்கம் மீது முதலீடுகள் அதிகரித்துள்ளன.