என் கவலையே மற்ற நாடுகளை பற்றி தான் – பைடன்
உலகளவில் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருவதுடன் பணவீக்க விகிதமும் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் அமெரிக்காவின் ஒரிகான் பகுதியில் பேசிய அதிபர் பைடன், அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் நடவடிக்கையால் அமெரிக்க டாலரின் மதிப்பு மிகவும் வலுவாக உள்ளதாக கூறினார். உள்நாட்டிலேயே ஏராளமானோர் வேலைவாய்ப்பின்றி தவித்து வரும்போது பைடன் இவ்வாறு பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது
மேலும் டாலர் வலுவாக இருந்தாலும் பிறநாடுகளைப்பற்றி தாம் கவலைப்படுவதாகவும் பைடன் தெரிவித்தார். பொருளாதார மந்தநிலையால் பலர் வேலையிழக்கும் வாய்ப்புள்ளதாக பேசிய அதே அதிபர் தற்போது டாலர் மிக வலுவாக உள்ளதாக பேசியுள்ளார்
வெளிநாடுகளின் நிதி கொள்கை உலக வளர்ச்சியை பாதிப்பதாக கூறியுள்ள பைடன் பாகிஸ்தான்,சீனாவையும் கடுமையாக சாடினார். ரஷ்யாவில் போர் நிலவி வரும் சூழலில் அவர்களுடன் சீனா கைகோர்த்திருப்பதையும், பாகிஸ்தான் மிகவும் மோசமான நாடு என்றும் பேசியுள்ளார்.
அமெரிக்க அதிபர் பைடனின் இந்த கருத்து பாகிஸ்தானின் செபாஷ் ஷெரீப் அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதுடன், அமெரிக்காவுடனான நல்லுறவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.