எடை குறைப்பில் கவனம் செலுத்தும் மருந்து நிறுவனங்கள்..

ரத்தப்புற்றுநோய்க்கான மருந்து தயாரிக்கும் நிறுவனங்களின் வருவாய் குறைந்ததை அடுத்து, அந்த நிறுவனங்கள் தங்கள் கவனத்தை எடை குறைப்பு மருந்துகளில் செலுத்தி வருகின்றன. குறிப்பாக இந்தியாவை பூர்விகமாக கொண்ட நாட்கோ பார்மா மற்றும் டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் நிறுவனங்கள் தங்கள் கவனத்தை OZEMPIC என்ற மருந்தின் மீது செலுத்தியுள்ளன. ரத்த புற்றுநோய்க்கான் மருந்தை தயாரித்து வரும் நாட்கோ நிறுவனம் தனது 3 ஆவது காலாண்டில் 30% குறைந்துள்ளது. அந்நிறுவனத்தின் வருவாய் 464 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. முதலீட்டாளர்களும் இந்த நிறுவனத்தின் விற்பனை சரிவால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 8 பில்லியன் அளவுக்கு லாபம் அளித்து வந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் ,நாட்கோ, சிப்ளா, சன் பார்மா,சைடஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், கடந்த மார்ச் 2022-ல் அதிக வருவாய் ஈட்டி வந்தன. டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய வருவாயும் 5,140 கோடி ரூபாயாக இருந்தது. 2022ஆம் நிதியாண்டில் , கடந்த நிதியாண்டில் இந்த தொகை 8 ஆயிரத்து 301 கோடி ரூபாயாக இருந்தது. இந்திய பார்மா நிறுவனங்கள் 22 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள செமாகுளூடைட் மருந்தை தயாரிக்கிறது. இந்த மருந்தின் மொத்த மதிப்பு 28 முதல் 29 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. 180 நாட்களுக்குள் நாட்கோ நிறுவனம் உற்பத்தியை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. டாக்டர் ரெட்டீஸ் நிறுவனமும் கனடாவில் வரும் 2026-ல் இந்த மருந்தை களமிறக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் இந்த மருந்துக்கு பெரிய வரவேற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.