ஆலையை விற்ற நாட்கோ பார்மா..

மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் முக்கியமானதாக கருதப்படும் நாட்கோ, தனது 14.38 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட ஆலையை விற்றுள்ளது. ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள இந்த ஆலையின் மதிப்பு 115.57 கோடி ரூபாயாகும். இந்த ஆலையை விற்றுவிட்டதால் தங்கள் உற்பத்தி பாதிக்காது என்றும், நாட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 83 விழுக்காடு லாபம் அதாவது 676.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தொகை கிடைத்திருப்பதாக கடந்த செப்டம்பரில் கூறப்பட்டது. 33%வருவாய் உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டு இதே காலகட்டத்தில் வெறும் ஆயிரத்து 31 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் இருந்தது. நாட்கோ நிறுவனத்தின் EBITda தொகை 75.7% ஆக உயர்ந்து 804.2 கோடி ரூபாயாகவும், மார்ஜின் 58.66% ஆகவும் உயர்ந்துள்ளது. இரண்டாவது காலாண்டில் ஏற்றுமதி அதிகரித்துள்ள நிலையில், உள்ளூரிலும் வணிகம் ஜோராக நடைபெற்று வருகிறது. நாட்கோ நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் 0.34% குறைந்து 1,351 ரூபாயாக இருந்தது. இந்த ஆலையை விற்றுவிட்டதால் தங்கள் வழக்கமான செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இருக்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த ஆலையை யாருக்கு விற்றார்கள் என்ற தகவலை நாட்கோ நிறுவனம் தர மறுத்துள்ளது.