தொழில் பண்ண கொஞ்சம் பணம் வேணும்!!!!!! கேக்குறது யாருன்னு பாருங்க!!!
ஆசியாவிலேயே மிகவும் பணக்காரரான கவுதம் அதானி,அவரின் குழும நிறுவனங்களை வளர்க்க பங்குச்சந்தைகளில்
பொதுமக்களிடம் இருந்து முதலீடு பெற அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அதானி நிறுவன பங்குகளை பொதுமக்கள் வாங்கிக்கொள்ளலாம். மொத்தம் 20ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதானி நிறுவனம் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
இந்த பங்குகளை சலுகை விலையில் பொதுமக்கள் வாங்கிக் கொள்ள முடியும் அவர் வைத்துள்ள ஏகப்பட்ட கடனை அடைக்கவே இத்தகைய முயற்சியை அதானி செய்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். முதலீடு செய்யும் பெரிய தொகையை அதை விட பல மடங்கு உயர்த்தி திரும்ப தருவதில் ரிலையன்ஸ் நிறுவனம் புகழ்பெற்றது அதே பாணியில் அதானியும் தற்போது களமிறங்கியுள்ளார். இவ்வாறு இஷ்டத்துக்கும் லாபத்தை திருப்பி தரும் முறைக்கு price freely என்று பெயர். இந்த வகையில்தான் தற்போது அதானி நிதி திரட்ட திட்டமிட்டு இருக்கிறார். அதானி முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் 35%நிதியை அவர் சில்லரை முதலீட்டாளர்களிடம் இருந்து தான் பெற திட்டமிட்டு இருக்கிறார். அதானி நிதி திரட்ட திட்டமிட்டுள்ள தொகை எல்ஐசி நிறுவன நிதி திரட்டும் முயற்சிக்கு நிகரானதாகும்.