பி.எஃப் கணக்கில் வருகிறது புதிய மாறுதல்….
ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் அந்த நிறுவனத்தில் இருந்து பெறும் சம்பளத்தின்போது, பிஃஎப் எனப்படும்
வருங்கால வைப்பு நிதியை பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் அதில் உச்சவரம்பை மாற்றி அமைக்க மத்திய அரசு
திட்டமிட்டு வருகிறது. தற்போது அதிகபட்ச பி.எப் பிடித்தம் மாதம் 15 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இனி இது 21 ஆயிரம் ரூபாயாக உயர அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு வரை பி.எப் உச்ச வரம்பு வெறும் 6 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்தது. இந்த தொகை அதே ஆண்டில் 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது இது மேலும் உயர உள்ளதால், அதிகப்படியான பணியாளர்கள் பயனடைய உள்ளனர். இந்த வரம்பை உயர்த்துவது தொடர்பாக ஒரு நிபுணர் குழுவை மத்திய அரசு அமைக்க இருக்கிறது. 20 நபர்கள் ஒரு நிறுவனத்தில் பணியாற்றினாலே அவர்களுக்கு கட்டாயம் பி.எஃப் அளிக்க வேண்டும். என்கிறது சட்டம் இந்த புதிய உச்சவரம்பால் மேலும் பல ஆயிரம் பணியாளர்கள் பயன்பெற இருக்கின்றனர். சிறு குறு நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இந்த உச்சவரம்பு மாற்றி அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. பி.எஃப் பணம் உச்சவரம்பு அதிகரிக்கப்படும் பட்சத்தில் பணியாளர்கள் ஓய்வு பெறும்போது பென்சன் தொகை அதிகம் கிடைக்க இருக்கிறது. சமூக பாதுகாப்புக்காக இந்த மாற்றியமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.