வருகிறது பஜாஜில் புதிய மின்சார ஸ்கூட்டர்
இருசக்கர வாகன உற்பத்தியில் ஜாம்பவானாக திகழும் பிரபல நிறுவனம் பஜாஜ். இந்நிறுவனம் வரும் 9 ஆம் தேதி தனது புதிய மின்சார் சீட்டாக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இதில் புதுவித டிசைன், களமிறக்கப்பட்டுள்ளது.
2024 சீட்டாக் அர்பேன் ரக ஸ்கூட்டர் அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம் , நமக்கு கிடைத்த தகவலின்படி, 3.2கிலோவாட் அளவு வசதி கொண்ட பேட்டரி இந்த புதிய வாகனத்தில் இடம்பிடித்திருக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 127 கிலோமீட்டர் தூரம் இந்த வண்டி பயணிக்கும். தற்போதுள்ள பேட்டரிகள் வெறும் 2.88 கி.வோ. அளவு மட்டுமே உள்ளது இதனால் 113 கிலோமீட்டர் தூரம் மட்டுமே பயணிக்க முடியும். புதிய பேட்டரி 4.30 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடுமாம்.இந்த வகை வண்டி அதிகபட்சமாக மணிக்கு 73 கிலோமீட்டர் வேகம் பயணிக்குமாம். தற்போதைய எல்சிடிக்கு பதிலாக டிஎப்டி ரக தொடுதிரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீட்டுக்கு அடியில் உள்ள சேமிப்பு வசதி 18 லிட்டருக்கு பதிலாக 21 லிட்டராக உயரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. விலை குறித்த விவரங்கள் வரும் 9 ஆம் தேதி தெரிந்துவிடும்.