டாடாவில் வருகிறது புதிய ஐபிஓகள்..
டாடா குழுமம் அடுத்த இரண்டு அல்லது 3 ஆண்டுகளில் அடுத்தடுத்த ஆரம்ப பங்கு வெளியீடுகளை செய்ய திட்டமிட்டுள்ளது.
டாடா கேபிடல் ,டாடா ஆட்டோ காம்ப் சிஸ்டம்ஸ், டாடா பேசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி, பிக்பாஸ்கெட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு தயாராகியுள்ளன. டிஜிட்டல், ரீட்டெயில் , செமிகண்டக்டர்கள் ,மின்சார வாகன பேட்டரிகள் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் முதலீடுகள் ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. டாடா குழுமத்தில் பல வணிகங்கள் கால் நூற்றாண்டு வயது கொண்டவை அவை மேலும் வளர்ச்சி அடையும் தருவாயில் இருக்கின்றன. மேலும் தைரியமான ரிஸ்க் எடுக்க சில டாடா நிறுவனங்கள் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்தாண்டு நவம்பரில் டாடா டெக்னாலஜீஸ் நிறுவனம் 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஆரம்ப பங்கு வெளியீட்டை செய்தன. கடந்த 2004-ல் டிசிஎஸ் ஆரம்பிக்கும்போது ஆரம்ப பங்கு வெளியீடு செய்யப்பட்டது. அதன் பிறகு கடந்தாண்டுதான் பங்கு வெளியிடப்பட்டது. டாடா மோட்டார்ஸ் 2314 கோடி ரூபாய் நிதியை பெற்றிருந்தது. எதிர்பார்த்ததைவிட 69 மடங்கு அதிகம் டாடா மோட்டர்ஸை மக்கள் வாங்கியுள்ளனர்.
டாடா குழும நிறுவனங்கள் இந்தியாவை மையப்படுத்தியே இருக்கின்றன. 2027ஆம் ஆண்டுக்குள் 90 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய கடந்த 2022-ஆம் ஆண்டே திட்டமிடப்பட்டது. செமிகண்டக்டர்கள், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் 120 பில்லியன் அமெரிக்க டாலர்களை கூட முதலீடுகள் தாண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். டிவிடண்டாக மட்டுமே 23 நிதியாண்டில் 33,252 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. நிதித்துறை நிறுவனமான டாடா கேபிடல் நிறுவனத்தில் டாடா குழுமம் கவனம் செலுத்தி வருவதாகவும் ரிசர்வ் வங்கியிடம் இது சார்ந்த படிவங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வங்கி சாரா நிதி நிறுவனங்களை வலுப்படுத்தும்பட்சத்தில் டாடா குழுமம் விரைவில் ஆரம்ப பங்கு வெளியீட்டை செய்யும் என்றும், பொதுப்பட்டியலுக்கு கண்டிப்பாக வரும் என்றும் நிபுணர்கள் கணிக்கின்றனர்.