வரும் 1 ஆ் தேதி ஓடிபிக்கு வருகிறது புது ரூல்ஸ்..
வரும் 1 ஆம் தேதி முதல் வங்கிக்கணக்கு வைத்திருப்போர், நிதிநிறுவன கணக்குகள் வைத்திருப்போருக்கு செல்போன்களில் மெசேஜ் வருவது தாமதமாகலாம் என்று டிராய் அமைப்பு எச்சரித்துள்ளது. மோசடிகளை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லிங்குகளை மெசேஜ்களில் அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்றும் டிராய் குறிப்பிட்டுள்ளது. டிராயிடம் பதிவு செய்யாதவர்கள் இதை அனுப்ப முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் நிறுவனங்களின் மெசேஜ் டெம்ப்ளேட் குறித்த விவரங்களை தங்கள் வசம் ஒப்படைக்கவும் டிராய் சுட்டிக்காட்டியுள்ளது. அவ்வாறு டெம்ப்ளேட்டை தங்கள் வசம் காண்பிக்காவிட்டால் அந்த மெசேஜ்கள் பிளாக் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 150 கோடி முதல் 170 கோடி வரையிலான வணிக மெசேஜ்கள் செல்வதால் மொத்த கணக்கு ஒரு மாதத்தில் 550 கோடி மெசேஜ்கள் ஒரு மாதத்தில் அனுப்பப்படுகின்றன. இதனை அமல்படுத்த டெலிகாம் நிறுவனங்கள் மத்திய அரசிடம் அவகாசம் கேட்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் போதுமான கால அவகாசம் ஏற்கனவே அளிக்கப்பட்டு விட்டதாக அரசு தரப்பில் கோரிக்கை நிராகரிக்கப் பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021-ல் கூட டிஎல்டி பிளாட்பார்ம்களை இந்தியாசெயல்படுத்தியது. நிறுவனங்கள் அளிக்கும் டெம்ப்ளேட்கள் மற்றும் தகவல்கள் முறையாக இல்லாவிட்டால் குறிப்பிட்ட மெசேஜ்கள் மடுக்கப்படும் என்பதே அதன் அர்த்தம். இதையடுத்தே தற்போது அனைத்து வணிக பிரிவினரும் தங்கள் மெசேஜ்களை டெலிகாம் நிறுவனங்களுடன் பதிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கால்பேக் நம்பர் வந்தாலும் இனி குறிப்பிட்ட மெசேஜ்கள் பிளாக் செய்யப்பட்டுவிடும்