அடுத்த பட்டியல் தயார்!!!
இந்திய ரயில்வேவுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிறிதும் பெரிதுமாக ஏராளமான சொத்துக்களும்,உப நிறுவனங்களும்
உள்ளன. இந்த சூழலில் குறிப்பிட்ட சில ரயில்வேவின் துணை நிறுவனங்களை விற்று பணமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனம்,ரயில் இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சேவை நிறுவனம் ரயில்விகாஸ் நிகாம் லிமிட்டட் ஆகிய நிறுவனங்கள் முதல்கட்ட பரிசீலனையில் உள்ளதாகவும், ரயில்டெல், ஐஆர்சிடிசி ஆகிய நிறுவனங்களையும் விற்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது.
நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் 65 ஆயிரம் கோடி ரூபாயை தனியாரிடம் விற்று அதை பணமாக்க
மத்திய அரசு திட்டமிட்டு வரும் நிலையில் இதுவரை எல்ஐசியின் பங்குகளை விற்றதன் மூலமாக அரசுக்கு 24,543 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.குறிப்பிட்ட 6 ரயில்வே நிறுவனங்களின் பங்குகளில் 10 விழுக்காட்டை விற்றாலே இந்திய அரசுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் விரைவில் கலந்து பேசி ஒரு முடிவை எட்ட உள்ளனர்.