தேசிய சேமிப்புத் திட்டத்துக்கு வட்டி இல்லையாம்..
தேசிய சேமிப்புத் திட்டத்துக்கு கடந்த 1 ஆம் தேதி முதல் வட்டி வழங்குவதை அரசாங்கம் நிறுத்தியுள்ளது. தேசிய சேமிப்புத்திட்டம் என்பது கடந்த 1987 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் அது 1992 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டு பின்னர் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் நிறுத்தப்பட்டாலும் அதற்கு உண்டான வட்டியை தொடர்ந்து செலுத்தி வந்தது அரசு. அண்மையில் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதியில் இருந்து தேசிய சேமிப்புத்திட்டத்துக்கு வட்டி தரப்படாது என்பது தெரியவருகிறது. மார்ச் 2003 முதல் செப்டம்பர் 2024 வரை இந்த திட்டத்துக்கு ஆண்டுக்கு ஏழரை விழுக்காடு வட்டி வழங்கப்பட்டு வந்தது. வட்டி தருவதை நிறுத்தியுள்ளதுடன் , இந்த திட்டத்தில் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் தங்கள் தொகையை எடுக்க நினைத்தால், முதலுக்கும் வட்டிக்கும் வருமான வரியாக 30 விழுக்காடு பணம் சென்றுவிடும், இதனால் தேசிய சேமிப்புத்திட்டத்தில் பணத்தை சேமித்து வருபவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர். திடீரென விதியை மாற்றுவது மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் என்று மூத்த குடிமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தேசிய சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்தவர்களஉக்கு வரிச்சலுகையாவது தரவேண்டும் என்று பட்டயக்கணக்கர் தெரிவித்துள்ளனர். தேசிய சேமிப்புத்திட்டத்தில் வைத்துள்ள பணத்தை அப்படியே தேசிய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற்றினால் வரி இல்லை என்று ஒரு அறிவிப்பை வெளியிடலாம் என்றும் அவர்கள் மத்திய அரசுக்கு யோசனை தெரிவிக்கின்றனர். மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு இது தொடர்பாக குஜராத் வர்த்தக சபை கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது. சிறுசேமிப்புத்திட்டங்களில் சேர்ந்தவர்களுக்கு தவறான முடிவு என்று அரசு நினைக்க வைக்ப்பதாகவும் அவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். அரசு விதித்துள்ள நிர்பந்தத்தை தவிர்க்க தேசிய சேமிப்புத்திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு இரண்டு தவணைகளாக பணத்தை எடுத்தால் 1.8லட்சம் ரூபாய் வரை வரியை மிச்சப்படுத்தலாம் என்று நிபுணர்கள் யோசனை தெரிவிக்கின்றனர். அரசு என்ன முடிவு எடுக்குமோ என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்