NVIDIA நிறுவன பங்குகள் சரிவு
அமெரிக்க பங்குச்சந்தையில் NVIDIA நிறுவனபங்குகள் 9.53% சரிந்தன. இதனால் அந்த நிறுவனத்துக்கு 279 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டம் சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த நிறுவனத்தில், செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற அச்சம் காரணமாக இந்த விலைவீழ்ச்சி நடந்துள்ளது. அமெரிக்க பங்குச்சந்தையின் வரலாற்றில் அந்நாட்டின் ஒரு நிறுவனம் ஒரே நாளில் சந்திக்கும் அதிகபட்ச சந்திப்பு இதுவாகும். எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சி மற்றும் லாபம் இல்லாத நிலையில் முதலீட்டாளர்கள் ஏமாற்றமடைந்ததே இந்த சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. சாட்ஜிபிடி நிறுவனத்துடன் என்விடியா நிறுவனம் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளது. 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள முதலீடுகளை இருநிறுவனங்களும் செய்ய இருக்கின்றன. தற்போது என்விடியா நிறுவனத்திற்கு தற்போது வாடிக்கையாளர்களாக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட், அமேசான், மெட்டா ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களுடன் பணியாற்ற 200 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மூலதன செலவீனமாக அளிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பை வலுப்படுத்த இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க நீதித்துறை சார்பில் என்விடியா நிறுவனத்துக்கு சட்ட நோட்டீஸும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் சந்தையில் தனது ஆதிக்கத்தை என்.விடியா நிறுவனம் தவறாக பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.