ஒரு டாலர் 83 ரூபாய் ; காரணம் அது தானே!!!! அதே தான்!!!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத உச்சமாக 83 ரூபாய் 02 பைசா என்ற அளவை எட்டியுள்ளது. அமெரிக்க டாலரை வலுப்படுத்தும் அத்தனை முயற்சியிலும் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வரும் நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாக கவிழ்ந்துள்ளது. இந்த நேரத்தில் அமெரிக்க டாலர்களை வாங்க வேண்டாம் என்று தனியார் நிதி நிறுவன ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க டாலர் வலுவடைந்து வரும் நிலையில் இந்திய பாண்ட்களில் 10 ஆண்டுகளுக்கான பத்திரங்களின் விலை 7.4 விழுக்காடாக
இருந்ததில் இருந்து 7.45 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அமெரிக்க சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்திய பத்திரங்களை விற்பது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கருதுகின்றனர்.