பங்காளிக்கு ஒரு விலை!!!! எனக்கு ஒரு விலையா???
ரஷ்யாவும்-பாகிஸ்தானும் மிக முக்கிய தோழர்களாக கடந்த காலத்தில் இருந்துள்ளனர், இந்த சூழலில் பாகிஸ்தான் நாட்டு நிதியமைச்சர் இஷாக் தர், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்க பாகிஸ்தான் தயாராக உள்ளதாகவும் இந்தியாவுக்கு எத்தனை ரூபெலுக்கு ரஷ்யா கச்சா எண்ணெயை தருகிறதோ அதே விலையில் பாகிஸ்தானுக்கும் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த ஆரம்ப காலகட்டத்தில் புதினுக்கு ஆதரவாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் செய்தார். இதன் காரணமாக அமெரிக்காவின் கடும் கோபத்துக்கு பாகிஸ்தான் அரசு ஆளானது. இதன் விளைவாக அமெரிக்காவின் உதவியுடன் இம்ரான்கான் அரசு தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் அண்மையில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாகிஸ்தான் மிகமோசமான ஆபத்தான நாடு என்று தெரிவித்திருந்தார் , இந்த சூழலில் உடைந்த உறவை ஒட்டவைக்கும் முயற்சியாக பாகிஸ்தான் நிதியமைச்சர் அமெரிக்க பயணம் அமைந்துள்ளது.