நிர்மலா சீதாராமனின் முயற்சியை வரவேற்ற ப.சிதம்பரம்
பெரிய நிறுவனங்கள் வங்கிகளில் இருந்து பெற்ற கடன்களில் வாராக்கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு இதே பிரச்னையை ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் ஹேர்கட் எனப்படும் முறையில் வங்கிகளில் இருந்து பெற்ற கடன்கள் வாராக்கடன் என்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், அதிலும் குறிப்பாக 514 நிறுவனங்களுக்கு 5 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிகள் சலுகைகள் அளித்துள்ளதாக காட்டமாக கூறியிருந்தார். இந்த நிலையில் அண்மையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த பிரச்னை குறித்து ஆலோசிக்க இருப்பதாக கூறியிருந்தார். இதற்கு ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
எனினும் வெறும் 13 நிறுவனங்கள் பெற்ற கடன் மட்டும் 4 லட்சத்து 46 ஆயிரத்து 800 கோடி ரூபாயாக உள்ளது. அதிலும் 1 லட்சத்து 61,820 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே பணம் திரும்ப வசூலிக்கப்பட்டதாகவும்,மீதமுள்ள 64% தொகை, அதாவது, 2 லட்சத்து 84 ஆயிரத்து 980 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெரிய அளவில் வங்கிக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவது அரசியல் கட்சிகளுக்கு கருப்புப்பணம் செல்வதை காட்டுவதாக சிலர் டிவிட்டரில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.