கொட்டும் மழை!!! அதுவும் பணமழை!!!
சாதகமான சூழல் உள்ளதால் இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 6வது நாளாக ஏற்றம் காணப்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 62 ஆயிரத்து 681 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 55 புள்ளிகள் உயர்ந்து 18ஆயிரத்து 618 புள்ளிகளாக உள்ளது.சர்வதேச அளவில் கடந்த டிசம்பர் மாதத்துக்கு பிறகு மீண்டும் கச்சா எண்ணெய் மிகக்குறைவான அளவை எட்டியுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸின் சந்தை முதலீட்டு மதிப்பு செவ்வாய்க்கிழமை மட்டும் 287 டிரில்லியன் ரூபாயாக இருந்தது. மக்கள் தினசரி வாங்கும் வீட்டு உபயோக பொருட்களின் விலை இன்று பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் கண்டதால் இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. பல நிறுவனங்கள் கடந்த ஓராண்டில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளன.
இந்துஸ்தான் யூனிலிவர்,ஹீரோ மோட்டர்கார்ப்,சிப்ளா, பிரிட்டானியா உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு
நல்ல லாபத்தை தந்துள்ளன இண்டஸ் இன்ட், கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.
FMCG மற்றும் உலோகத்துறை பங்குகள் நல்ல வளர்ச்சி பெற்றன. வங்கிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்களின் கவனம் அதிகம் இருந்தது.