வெளிநாடு வாழ் இந்தியர்களை ஈர்க்கும் தனியார் வங்கிகள்
வட அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து பணம் அனுப்பும் இந்தியர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் பணத்தில் 23விழுக்காடு அமெரிக்காவில் இருந்தும், அரபு நாடுகளில் இருந்து 18% வருகிறது. அதுவும் தனியார் வங்கிகள் மூலமாக வருவதாக தெரிகிறது. வட அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், பொதுவாக பொதுத்துறை வங்கிகளை தவிர்த்து தனியார் வங்கிகளை நாடுவதாக கூறப்படுகிறது.
அரபு நாடுகளுக்கு செல்ல ஆர்வம் குறைந்ததால் அங்கிருந்து பணம் வரும் அளவும் குறைந்துள்ளது. பொதுவாக கேரளாவில் இருந்து தான் அதிகம் பேர் அரபு நாடு வேலையில் ஈடுபடுவதாக ஒரு பார்வை உள்ளது. ஆனால் தற்போது இந்த நிலை மெல்ல மாறி வருகிறது. 2020குடியுரிமை தரவுகளின் படி வட இந்தியர்கள் அரபு நாடுகளுக்கு செல்வது உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக உத்தர பிரதேசம், ஒடிசா, பீகார் மேற்கு வங்கத்தை சேர்ந்தோர் என தெரியவந்துள்ளது