பெட்ரோலியத் துறைக்கும் வருகிறது உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை!!!
எரிபொருள் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்தியஅரசு பல முக்கிய திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இந்த வகையில் பிஎல்ஐ எனப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையை பெட்ரோலியம் மற்றும் ரசாயனத்துறைக்கும் கொண்டுவர நிதியமைச்சகம் ஆலோசித்து வருகிறது. 10 ஆயிரம் கோடி ரூபாயில் இதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. குறிப்பிட்ட சில நிறுவனங்கள் இந்த திட்டத்தின் மூலம் 20% ஊக்கத்த தொகை பெற முடியும் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளுக்கு மாற்றாக 50 வகை ரசாயனங்களை கருத்தில் கொண்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளன இது தொடர்பாக கடந்த 2007ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திட்டம் மீண்டும் தூசி தட்டி எடுக்கப்படுகிறது. 5டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் ரசாயனங்கள் ஏற்றுமதியில் 6வது இடத்தில் உள்ள இந்தியா, மொத்தம் 80 ஆயிரம் வகையான ரசாயனங்களை ஏற்றுமதி செய்து வருகிறது அரசு தரவுகளின்படி 2020ம் ஆண்டில் 52 வகை ரசாயனங்களின் தேவை 26 மில்லியன் டன்னாக உள்ளதாக அறிவிக்கப்ப்டடுள்ளது.