ஆட்டிப்படைக்கும் வேலையில்லா திண்டாட்டம்.!!! திண்டாடும் இந்தியர்கள் …
உலகளவில் பிரபலமான அமேசான் நிறுவனம் கடும் நிதி நெருக்கடி காரணமாக வேறு வழியின்றி 10 ஆயிரம் பணியாளர்களை பணியில் இருந்து தூக்கியது இந்தியாவில் இருந்து எச்1 பி விசாவில் வேலைக்கு சேர்ந்த பல பொறியாளர்கள் இந்த வேலையிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ராஜ் கன்சக்ரா என்ற மென்பொறியாளர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக அமேசானின் அலெக்சா பிரிவில் வேலை செய்துள்ளார். துவக்க காலத்தில் இருந்து தற்போது பிரபலமாகும் வரை அலெக்சாவின் வளர்ச்சிக்காக பங்காற்றியதாக கூறியுள்ள அவர், தற்போது வேலை இழந்துள்ளதால் செய்வதறியாது தவிப்பதாக
தெரிவித்துள்ளார். இதே பிரிவில் வேலைக்கு சேர்ந்த தீக்சிதா, டேட்டா சயின்ஸ் படித்து பணியில் அமர்த்தப்பட்டார், திடீர்
வேலையிழப்பு காரணமாக மீண்டும் தற்போது வேலை தேடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார் மெஷின் லர்னிங் படித்த ஷிவானி பராட்டி என்ற பெண் மென்பொறியாளரும் இந்த வேலை நீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக மற்றொரு வேலையை தேடிக்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி நிறுவனங்களான அமேசான், டிவிட்டர், மெட்டா நிறுவனங்களில் அடுத்தடுத்து இந்திய வம்சாவளியினர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு தீர்வு என்ன என்பது காலத்தின் கைகளிலேயே உள்ளது.