நிதிநுட்ப நிறுவனங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் சஞ்சய்..

புதிய கண்டுபிடிப்புகளுக்கும் நிர்வாக ஒழுங்குமுறைக்கும் இடையேயான சமநிலை என்பது எப்போதும் கேள்விக்குறிதான்.புதிய நுட்பங்கள் இந்தியாவில் இல்லாமல் இருந்திருந்தால் வங்கிகள் இத்தனை பெரிய வளர்ச்சி எட்டியிருக்காது. தொழில்நுட்பத்தின் உதவியால்தான் குறுகிய கால கடன்களும், துரித காப்பீட்டு பணமும் கிடைக்கிறது. இதே நேரம் புதிய கண்டுபிடிப்புகளில் சில சவால்கள் உள்ளன. அந்த சவால்களை ஒழுங்குமுறை அமைப்புகள் கண்கொத்தி பாம்பாக கண்காணிக்கின்றன. நிதி நுட்ப நிறுவனங்களுக்கு பெரிய சவாலாக இருப்பது நிர்வாக கட்டணங்கள்தான். இந்த செலவீனங்களை குறைக்காமல் முயற்சி செய்து நிறைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் காணாமல் போயின. நிலையான பிசினஸ் மாடல் இல்லாமல் நிறைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொலைந்தே போய்விட்டன. இந்த நிலையில்தான் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தொழில்நுட்பத்தில் மிகச்சிறந்தவராவார். இவர் அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோதே இதனை நிரூபர்களால் பார்க்க முடிந்தது. புதிய கண்டுபிடிப்புகளில் பாதிப்பு ஏற்படாமல், விதிகளை சரியாக வகுக்க உள்ளதாக சஞ்சய் கூறியிருந்தார். செய்தியாளர்களின் சந்திப்பில் சஞ்சய் பேசியிருந்த வார்த்தைகளில் தொழில்நுட்பம் 20 முறையும், கண்டுபிடிப்புகள் என்ற வார்த்தை 12 முறையும் இடம்பிடித்திருந்தன.
கான்பூர் ஐஐடியில் கணினி அறிவியல் பட்டம் படித்த மல்ஹோத்ரா, நிதிநுட்பத்துறையில் தொழில்நுட்பத்தை ஆழமாக புகுத்துவார் என்றே நம்பப்படுகிறது.