வசமாக சிக்கிய ரிலையன்ஸ் நிறுவனம்!!!
பெங்களூருவில் வசித்து வருபவர் 34 வயதான ரவிகிரன்,இவர் நந்தினி லே அவுட் பகுதியில் அண்மையில் ரிலையன்ஸ் ஸ்மார்ட் பாயிண்டில் சில பொருட்களை வாங்கியுள்ளார் ஒன்றிரண்டு இல்லை, 2ஆயிரம் ரூபாய்க்கு பொருட்களை வாங்கியுள்ளார், பொருட்களை வாங்கிய அவர் கேரி பேக் கேட்டுள்ளார். அதற்கு 25 ரூபாய் அளித்தால் மட்டுமே கேரி பேக் தரமுடியும் என ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது அவரும் கேட்ட பணத்தை அளித்துவிட்டு பொருட்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றார். இருந்தாலும் ரிலையன்ஸ் செய்த மோசடியால் மனம் நொந்துபோன ரவி பெங்களூரு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனத்துக்கும், குறிப்பிட்ட கிளையின் மேலாளருக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணைக்கு வரும்போது ரிலையன்ஸ் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை 2 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்களை வாங்கிய பிறகு அதை எப்படி எடுத்துச் செல்ல முடியும் என வாதிட்ட ரவி, இழப்பீடு கோரினார் வாடிக்கையாளர் உரிமையை மீறும் செயலாக இது உள்ளதாக வாதிட்ட ரவி, ரிலையன்ஸ் ரீட்டெயில் விதிகளை மீறிவிட்டதாக சாடினார். இதனை கருத்தில் கொண்ட நீதிமன்றம் , நோட்டீஸ் அளித்தும் வராத மேலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் குறிப்பிட்ட அந்த கிளையில் இருந்து பாதிக்கப்பட்ட நபருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் அவரிடம் இருந்து பெற்ற 25 ரூபாய் பணத்தையும் நீதிமன்ற செலவு 2 ஆயிரம் ரூபாயையும் 60 நாட்களில் செலுத்த உத்தரவிட்டுள்ளது. இதே பாணியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பாடா நிறுவனமும் இவ்வாறு கேரி பேக் அளிக்க காசு கேட்டு பின்னர் அதற்கு இழப்பீடும் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.