நவம்பரில் சரிந்த சில்லறை பணவீக்கம்..

இந்தியாவின் சில்லறை பணவிக்கம் அக்டோபரில் 6.2விழுக்காட்டில் இருந்து நவம்பர் மாதம் 5.5 விழுக்காடாக குறைந்துள்ளது. உணவுப்பொருட்கள் விலை குறைந்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. உணவுப்பொருட்களின் விலைவாசி என்பது அக்டோபரில் 10.9விழுக்காடாக இருந்தது. இது தற்போது 9 விழுக்காடாக வீழ்ந்துள்ளது. இந்தியாவின் நுகர்வோர் விலை பணவீக்கம் என்பது 3.9 விழுக்காடாக இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் இலக்கான 4 விழுக்காடு என்ற அளவிலேயே இது தொடர்கிறது. இந்த பணவீக்கம் அதிகரித்ததால்தான் அண்மையில் நடந்த ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தில் ரெபோவட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. டிசம்பரிலும் இதே அளவு சில்லறை பணவீக்கம் 5.4 விழுக்காடாக இருந்தால் ரிசர்வ் வங்கியின் 3 ஆவது காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும்என்கிறார்கள் நிபுணர்கள்.
இந்தியாவில் நுகர்வோர் பணவீக்கம் என்பது ஜனவரி மாதத்திலும் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது. 2026 நிதியாண்டில் இந்தியாவின் பணவீக்கம் இன்னும் குறைந்து 4.3விழுக்காடாககுறைய வாய்ப்புள்தாக ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது. உணவுப்பொருட்கள் விலைவாசி சற்று குறைந்திருந்தாலும் சில பொருட்களின் விலை இன்னும் இரண்டு இலக்கங்களிலேயே தொடர்கின்றன. உருளைக்கிழங்கு, கேரட், பூண்டு ஆகியவற்றின் விலைவாசி மிகக்கடுமையாக இருக்கிறது. அண்மையில் பெய்த பருவமழையால் உணவுப்பொருட்கள் விலை உயர்வு தடுக்கப்படும் என்றும் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்தியாவின் நுகர்வோர் விலை பணவீக்கம் 5விழுக்காடுக்கும் கீழே சென்றால் வரும் பிப்ரவரியில் இந்திய ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது. அப்படி குறைக்கப்பட்டால் 25 அடிப்படை புள்ளிகள் குறையவே அதிக வாய்ப்புகள் உள்ளன.