8.2லட்சம் கோடி சரிவு..

இந்தியாவின் மிகவும் மதிப்பு மிக்க நிறுவனமான டாடா குழுமத்துக்கு 2025ஆம் ஆண்டு பெரிய சரிவை அளித்து வரும் ஆண்டாக அமைந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் அந்த நிறுவனத்தின் 24 நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 8.2லட்சம் கோடியை இழந்துள்ளது. இது அந்த நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பில் 24%ஆகும். கடந்தாண்டுசெப்டம்பரில் 34.77லட்சம் கோடி ரூபாயாக இருந்த இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு தற்போது 26.5லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது. டாடா குழுமத்தில் பாதிப்பை சந்தித்து வருவது டிசிஎஸ் நிறுவனம்தான். அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3.67லட்சம் கோடி ரூபாய் வீழ்ந்துவிட்டது. இதுகடந்த 6 மாதங்களில் நடந்த மாற்றம். செயற்கை நுண்ணறிவு மற்றும் ஐடி நிறுவன கிளையன்ட்கள் மாற்றமே இந்த நிறுவன வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது. மிகமோசமான பாதிப்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகளை சொல்லலாம். இந்தநிறுவனம் 42.78விழுக்காடு அளவுக்கு சரிவு காணப்பட்டுள்ளது. 1.7லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை அந்நிறுவனம் இழந்துள்ளது. டிரென்ட்,ஜூடியோ, டைட்டன் உள்ளிட்ட பல நிறுவனங்களும் இழப்பை சந்தித்துள்ளன. டாடா பவர், டாடா டெக்னாலஜீஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் பெரிய சரிவை கண்டுள்ளன. டாடாவின் ஹோட்டல் வணிகம் மட்டுமே சிறப்பாக செயல்பட்டு லாபத்தை ஈட்டி வருகிறது. அமெரிக்க பங்குச்சந்தைகளில் திருத்தம் ஏற்பட்டால் அதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலிக்கும் என்று கூறியுள்ள பங்குச்சந்தை நிபுணர்கள், குறுகிய கால வணிகர்களுக்கு இந்த சந்தை உகந்தது இல்லை என்றும், ஏற்கனவே கரெக்ஷன் நடந்துவிட்டதாகவும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவது நின்றாலே இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல லாபம் இருக்கும் என்றும் அதுவரை சரிவை முதலீட்டாளர்கள் ஏற்கலாம் என்றும் நிபுணர்கள் அறுவுறுத்துகின்றனர்.