கிராமங்களில் அமோகமாக விற்கப்படும் பொருட்கள்..

இந்தியாவில் மக்கள் அதிகம் வாங்கும் வீட்டு உபயோக பொருட்கள் கிராமங்களில்தான் அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளீட்டுப்பிரிவு பணம் அதிகரிப்பு, லாபம் குறைவு, போட்டி அதிகரிப்பு ஆகியவற்றிற்கு மத்தியில் இந்த விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. கோத்ரேஜ், டாபர், ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் விற்பனை பிரதிநிதிகளை அதிகரித்துள்ளனர். நகரங்களை விட கிராமப்புற மக்கள்தான் அதிக பொருட்களை வாங்குவதாகவும், பருவமழை சரியான நேரத்தில் பொழிந்ததாலும், அறுவடை சிறப்பாக இருந்ததாலும் மக்கள் அதிகம் பொருட்களை வாங்கியது தெரியவந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த கோத்ரேஜ் நிறுவனம்,சாதாரண மக்கள் வாங்கும் வகையில் நிறைய புதிய பொருட்களை அறிமுகப்படுத்தினர். டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டாபர் நிறுவனம் களத்தில் அதிக விற்பனை பிரதிநிதிகளை களமிறக்கியுள்ளது. ஹேர் ஆயில், பற்பசை, நறுமன பொருட்கள் உள்ளிட்டவற்றை டாபர் விற்று வருகிறது. 1,22,000 கிராமங்களுக்கும் தங்கள் பொருட்கள் சென்று சேர்வதாக டாபர் நிறுவனம் கூறுகிறது. கிராமபுறங்களில் பணியாற்றும் இளைஞர்களுக்கான தேவை 10 முதல் 15%ஆக உயர்ந்துள்ளதாகவும், இதே நிலைதான் ஐடிசி நிறுவனத்திலும் தொடர்வதாக அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் ஐடிசி நிறுவனத்தின் பொருட்கள் 1.3மடங்கு அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது. துரித வர்த்தகத்தின் தாக்கம் காரணமாக இந்தியாவின் பல்வேறு பகதிகளிலும் பணியாளர்கள் தேர்வு அமோகமாக நடக்கிறது.