வருவாய் இழக்கும் சில்லறை விற்பனை யாளர்கள்
ரஷ்யா உக்ரைன் போர் தொடக்கத்தில் இருந்து பெட்ரோலிய பொருட்கள் விலை உச்சம் பெற்றுள்ளன. இந்நிலையில் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் சில்லறை விற்பனையாளர்களுக்கு தரும் மார்ஜின் தொகை குறைவாக உள்ளது.
இதனால் சில்லறை விற்பனையாளர்களுக்கு வரும் வருவாய் சரிந்தது வருகிறது. குறிப்பாக 77டாலர் ஒரு பேரல் கச்சா எண்ணெய் புதிய உச்சம் தொட்டது. இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் தவிர பிற நிறுவனங்கள் நஷ்ட ம் அடைந்துள்ளன.
இந்த சூழலில் பல நாட்களாக பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பெட்ரோலிய பொருட்கள் விலை ஏற்ற படவில்லை. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு அளிக்க வேண்டிய மார்ஜினை உயர்த்தவில்லை. இதனால் சில்லறை விற்பனையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உண்டாகி இருக்கிறது.