எங்களை தப்பு சொல்றதே வேலையா போச்சு!!!!
மாதாந்திர பொருளாதார நிலை குறித்து மத்திய நிதியமைச்சகம் ஆய்வு நடத்தி வருகிறது. செப்டம்பர் மாத
பொருளாதார நிலை சிறப்பாக உள்ளதாக கூறிய அமைச்சகம் நடுத்தர காலகட்டத்துக்கான வளர்ச்சி 6 விழுக்காடாக
இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் உள்கட்டமைப்புகள் சிறப்பாக உள்ளதாக கூறியுள்ள நிதியமைச்சகம், சர்வதேச காரணிகளால் ஏற்ற இறக்கம் நிலவுவதாக கூறியுள்ளது. சிறு வணிகத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து வசதிகளும் இந்தியாவில் உள்ளதாக அந்த அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் நிலையற்ற தன்மை இந்தியாவில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் முக்கிய காரணியாக
உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் சர்வதேச அளவில் நிலவும் ரஷ்யா உக்ரைன் போர், பண வீக்கம், கடுமையான வட்டி உயர்வு உள்ளிட்ட காரணிகள் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது