செபியின் அதிரடி விசாரணை…
பங்குசந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி ஜனவரி 19 ஆம் தேதி புதிய விசாரணை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. . மியூல் எனப்படும் தரகு கணக்குகளையும், போலி ஆரம்ப பங்கு வெளியீட்டு விண்ணப்பத்தை அளிக்கும் விண்ணப்பங்களையும் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 3 வகையான விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது மோசடிகளை கண்டறிந்துள்ளதாகவும், சில வங்கிகளைச் சேர்ந்த வணிகர்கள் இப்படி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்திருப்பதாகவும் செபி கூறியுள்ளது. AIBI என்ற நிகழ்ச்சியில் செபியின் தலைவர் மதாபி புரி புச் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இரண்டு பங்குச்சந்தைகளுக்கும் தனித்தனி இயக்குநர்கள் குழு இருப்பதாக கூறியுள்ளார்.
சில்லறை மற்றும் பிரதான போர்டுகளுக்கு வித்தியாசம் இருப்பதாக மதாபி கூறினார். ரீட்டெயிலில் உள்ள பங்குகள் நிறுவனத்தின் குணாதிசயங்கள் குறித்து அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றும், பிராதன மெயின்போர்டு என்பது முற்றிலும் வேறு என்றும் மதாபி தெளிவுபடுத்தியுள்ளார் . போலியான ஐபிஓகளை விற்கவும் முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தவறான பான் கார்டு எண்கள், ஒரே பான் எண்ணை இரண்டு விண்ணப்பங்களில் பயன்படுத்துவதாகவும் மதாபி குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும், எந்த மாதிரியான தண்டனை அளிக்கப்படும் என்பது குறித்தும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால் விசாரணையை தீவிரப்படுத்த உள்ளதாகவும் மதாபி தெரிவித்தார்.