ஆண்டுக்கு 60,000 கோடி ஸ்வாகா..
நிதித்துறையில் ஒரு கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்று செபியின் தலைவர் மதாபி புரி புச் தெரிவித்துள்ளார். கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளரின் அடிப்படை தகவல்களை மையப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து மதாபி பேசியிருந்தார். அதில் வாடிக்கையாளர் தகவல்களை சேமிக்க kra என்ற அமைப்பை செபி உருவாக்கியுள்ளதாகவும்.ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர்கள் தங்கள் தரவுகளை அளிப்பதை தடுக்கும் நோக்கில் இந்த கேஆர்ஏ செயல்படுவதாக கூறினார். வெளிப்படைத்தன்மை குறித்து பேசிய மதாபி, அண்மையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கைக்கு ஆளான பேடிஎம் பேமண்ட் வங்கி திட்டத்தை சுட்டிக்காட்டி பேசினார். பேடிஎம் நிறுவனத்தை கேஆர்ஏ திட்டத்தில் இல்லாமல் அப்படியே அனுமதித்து இருந்தால் செபியின் கட்டமைப்பையே பாதித்து இருக்கும் என்றார். பியூச்சர்ஸ் அன்ட் ஆஃப்சன்களில் தனிநபர்கள் ஆண்டுதோறும் 60ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பதாகவும் மதாபி கூறியுள்ளார். சந்தையின் நிலைத்தன்மையை உறுதி செய்ய இந்திய பங்குச்சந்தைகள் தீர்க்கமான முடிவெடுக்கின்றன. அதிகரிக்கும் நஷ்டத்தை தடுக்கும் வகையில் புதிய விதிகளையும் மாற்றி அமைக்க ரிசர்வ் வங்கியும், செபியும் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. 2018-ல் 4.5 லட்சம் கோடிரூபாயாக இருந்த சராசரி பங்கு மதிப்பு2024-ல் 140 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்களை பாதுகாக்கும் நோக்கில் செபியில் ஏஎஸ்பிஏ என்ற புதிய வசதியையும் செய்ய செபி திட்டமிட்டுள்ளதாம். இந்த முறையால் முதலீட்டாளர்களுக்கு 2800கோடி ரூபாய் வரை பலன் கிடைக்கும் என்றும் மதாபி கூறியுள்ளார்.