எச்டிஎப்சிக்கு செபி எச்சரிக்கை…
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான எச்டிஎப்சிக்கு பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது. கேப்பிடல் மார்கெட் பிரிவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. மெர்சன்ட் வங்கி விதிகளை பின்பற்றவில்லை என்பதும், கேபிடல் மற்றும் உள் வணிக விதிகளை பின்பற்றவில்லை என்பதும் அந்த வங்கி மீது செபி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளாகும். செபியின் எச்சரிக்கையை அடுத்து தவறை திருத்திக்கொள்ளும் முயற்சிகளை எச்டிஎப்சி வங்கி முன்னெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் தேதிஅனுப்பப்பட்ட வங்கியின் எச்சரிக்கைக் கடிதம் கடந்த 11 ஆம் தேதி வங்கிக்கு கிடைத்துள்ளது. பிரபல வங்கிக்கு செபி எச்சரிக்கை விடுத்திருப்பதும் அதனை சரி செய்யும் முயற்சியில் எச்டிஎப்சி வங்கி இறங்கியதும் பங்குச்சந்தை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.