பரஸ்பர நிதி அழுத்தத்தை சோதிக்கும் செபி..
பரஸ்பர நிதி கட்டமைப்புகளில் இந்திய முதலீட்டாளர்கள் பங்கு சரியான வகையில் முதலீடு செய்யப்படுகிறதா என்று செபி சோதனை செய்து வருகிறது. சிறிய மற்றும் நடுத்தர பங்குகளில் இந்த சோதனையானது நடத்தப்பட உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நடுத்தர பங்குகள் அதிகளவில் முதலீடுகளை செய்து வருகின்றன. இது குறித்து பரஸ்பர நிதி சங்கமான AMFIசெபியுடன் ஆலோசனை நடத்தியது. அழுத்தங்களை சிறிய மற்றும் நடத்தர நிதிகள் தாங்குமா என்ற சோதனையை செய்ய வேண்டும் என்று ஆம்ஃபி கோரியது. இதுபோன்ற ஆய்வு நடத்துவது மிகவும் அரிதான நிகழ்வாகும். குறிப்பிட்ட ஒரு தரப்பு பரஸ்பர நிதியை மட்டும் சோதனை செய்த செபி, அடுத்தகட்ட நிதியை சோதிக்க இருக்கிறது. கடந்த 52 வாரங்களில் சென்செக்ஸ் 20 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. சிறிய முதலீட்டு குறியீடு 65 %உயர்ந்திருக்கிறது. நடுத்தர முதலீடுகளின் குறியீடு 59 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2023-ல் மட்டும் சிறிய முதலீட்டு பங்குகளின் மீதான முதலீடு 5.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. இது கடந்த 2022-ஐ விட இரட்டிப்பு மடங்கு அதிகமாகும். நடுத்தர முதலீட்டு அளவு என்பது 248.8 பில்லியன் ரூபாயாக உயர்ந்திருக்கிறது. 50 பில்லியன் ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் சந்தை மதிப்பு கொண்ட பங்குகள் சிறிய முதலீட்டு பங்குகளாக உள்ளன. இதேபோல் 50 முதல் 200 பில்லியன் ரூபாய்க்குள் இருக்கும் பங்குகள் நடுத்தர முதலீட்டு பங்குகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.