இந்திய சந்தைகளில் தொடரும் சரிவு..

இந்திய பங்குச்சந்தைகளில் மார்ச் 12 ஆம் தேதி புதன்கிழமை பெரியளவில் சரிவு காணப்படவில்லை.அதேநேரம் பெரிய ஏற்றமும் ஏற்படவில்லை.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 72 புள்ளிகள் குறைந்து 74,029 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 27 புள்ளிகள் குறைந்து 22,470 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. ஆட்டோமொபைல், மருந்துத்துறை பங்குகள்தான் அரைவிழுக்காடு வரை உயர்ந்தன. உலோகம், தகவல் தொழில்நுட்பம், டெலிகாம், பொதுத்துறை வங்கி, ஊடகத்துறை பங்குகள் அதிகபட்சமாக 3 விழுக்காடு வரை சரிந்தன. உலகளாவிய வர்த்தக சமநிலையற்ற சூழல் காரணமாக பங்குச்சந்தைகள் பெரியளவில் சரிந்தன. இண்டஸ் இன்ட், ஓலா எலெக்ட்ரிக் உள்ளிட்ட நிறுவன பங்குகள் தலா 2விழுக்காடு வரை லாபத்தை கண்டன. தகவல் தொழில்நுட்பம் மற்றும் கெய்னெஸ் டெக்னாலஜீஸ் நிறுவன பங்குகள் 8 விழுக்காடு வரை சரிந்தன. பங்குச்சந்தைகளில் சாதகமான சூழல் இல்லாததால் முதலீட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். இதனிடையே சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து 64,520ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 109 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ 2ஆயிரம் ரூபாய் உயர்ந்து 1லட்சத்து 09 ஆயிரம் ரூபாயாகவும் விற்கப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான 3 விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரம் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.