கிரிப்டோகரன்சிக்கு நோ சொன்ன சக்திகாந்ததாஸ்…
வணிகம் சார்ந்த பத்திரிகை நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் பங்கேற்றார். பல்வேறு கேள்விகள் அவரிடம் முன்வைக்கப்பட்டன.அதில் குறிப்பாக கிரிப்டோ கரன்சியில் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதில் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த முறை பேசும்போதும் கிரிப்டோகரன்சி என்பது மோசமான அச்சுறுத்தலை தருவதாகவும், அனைத்து நாடுகளிலும் நிதி நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தல் தருவதாகவும்,வளர்ந்து வரும் சந்தைகளை கொண்ட நாடுகளுக்கு கிரிப்டோகரன்சி மிகப்பெரிய அச்சுறுத்தலை தருவதாகவும் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டி சக்தி காந்ததாஸ் , கிரிப்டோகரன்சி பற்றி பேசினார். எங்கு, யாரை முறைப்படுத்துவீர்கள், எதை முறைப்படுத்துவீர்கள் என்று அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்தார். நிதிநுட்ப துறை வேகமாக வளர்ந்து வரும் துறைகளாக இருக்கிறது எனவும் சக்தி காந்ததாஸ் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் வங்கித்துறை கட்டமைப்புகள் வலுப்படுத்த ஓய்வின்றி உழைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மத்திய வங்கிகளின் டிஜிட்டல் கரன்சியான டிஜிட்டல் பணத்தை சில்லறை வணிகத்தில் களமிறக்கவும் பணிகள் நடப்பதாக சக்தி காந்த தாஸ் பேசினார்.