ஐபிஓ பணத்தை கடனை கட்ட பயன்படுத்துவதா? செபி காட்டம்..
ஆரம்ப பங்குகள் வெளியீடு மூலம் சந்தையில் நுழையும் நிறுவனங்கள் தாங்கள் ஏற்கனவே பிரமோட்டர்களிடம் இருந்து வசூலிக்கும் கடனை அடைப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. கேபிடல் மார்கெட் ஒழுங்குமுறையின்படி அவ்வாறு செய்வதில் தவறில்லை என்றாலும், சந்தையில் கிடைக்கும் தொகையை எடுத்து கடனை அடைக்கும் நிறுவனங்களுக்கு செபி ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இதனால் பல கோப்புகள் அப்படியே கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது.
சில நிறுவனங்களின் விவகாரங்களில் செபியே ஐபிஓ பணத்தை பயன்படுத்தி மறு ஃபைனான்ஸ் செய்யவும் அறிவுறுத்திய நிகழ்வுகளை பார்க்க முடிகிறது. செபியின் இந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வணிக வங்கிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், விரைவில் இது தொடர்பாக ஒரு மீட்டிங் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. AFcons என்ற நிறுவனம் ஐபிஓவில் கிடைக்க உள்ள பணத்தை எடுத்து கடனை அடைக்க திட்டமிட்டதாகவும், செபியின் இந்த ஆட்சேபனைக்கு பிறகு ஐபிஓ திட்டத்தையே அந்நிறுவனம் கைவிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய தீர்வை செபி அளிக்குமா என்பதை காத்திருந்து தான் பார்க்கவேண்டும்