4 ஆவது மாதமாக நிறுத்தம்..

ஒரு பெரிய தொகை சில ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்தால் போதும் என்பவர்களின் முதல் தேர்வு பரஸ்பர நிதி எனப்படும் மியூச்சுவல் ஃபன்ட்ஸ்தான். இதிலும் சிப் எனப்படும் மாதமாதம் பணத்தை கட்டி வருவது அண்மையில் பயங்கர பிரபலமானது. இந்த நிலையில் சிப்பில் பணம் போட்டுவிட்டு அதனை மீண்டும் தொடர முடியாமல் பாதியில் விட்டவர்கள் எண்ணிக்கையும் ஏராளம். இந்த நிலையில் நவம்பர் மாதம் சிப் பணம் செலுத்த முடியாமல் பாதியில் விட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து 4 ஆவது மாதமாக சரிந்துள்ளது. சிப்பில் பணம் போட ஆர்வம் குறைந்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஏஎம்எஃப்ஐ எனப்படும் பரஸ்பர நிதி அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, 49லட்சம் பேர் புதிய சிப் கணக்குகளை நவம்பரில் தொடங்கியுள்ளனர். இந்த எண்ணிக்கை அக்டோபரில் 63.7 லட்சமாக இருந்தது. சிப்பில் பணம் கட்ட முடியாமல் பாதியில் கைவிட்டவர்கள் எண்ணிக்கை 39.14லட்சமாக உயர்ந்துள்ளது. பணம் கட்ட முடியாமல் பாதியில் விட்டவர்களின் விகிதம் மே மாதத்தில் 88.38 ஆக இருந்தது. இது கடந்த மாதம் 79.12விழுக்காடாக எட்டியது. பங்குச்சந்தையில் மோசமான சூழல் இருக்கும்போது முதலீடு செய்ய வேண்டாம் என்று பலரும் நினைத்ததால்தான் சிப் பாதியில் நிறையபேர் கைவிடுவதும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கடந்த மேமாதத்திலும், அமெரிக்காவில் கடந்த மாதம் தேர்தல் நடந்ததும், சிப்பை பலரும் கைவிட முக்கிய காரணியாக அமைந்தது. நிறைய பேர் பாதியில் விட்டுச் செல்வது இந்திய பங்குச்சந்தைகளின் நிலைத்தன்மையை பாதிக்கும் என்பது நிபுணர்களின் வாதம். நவம்பரில் இந்திய பங்குச்சந்தைகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துள்ளது. உலகளாவிய பிரச்சனைகள், உக்ரைன் ரஷ்யா போர், சீனாவின் பொருளாதார மீட்பு ஊக்கத்தொகை அறிவிப்பு ஆகிய பிரச்சனைகளை இந்திய சந்தைகள் சந்தித்துள்ளன.