சார் எங்கள விட்டுருங்க!!! நாங்க ஓடிடுறோம்!!!
தனித்துவமான வடிவமைப்பு,வேகம் மற்றும் உலகின் சிறந்த பிராண்ட் என பல புகழ்களுக்கு சொந்தமாக உள்ளது. மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் பல வெளிநாட்டு நிறுவனங்களும் வர்த்தக தடையை அமல்படுத்தும் வகையில் ரஷ்யாவில் இருந்து வெளியேறி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது பென்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது. ரஷ்ய சந்தையில் இருந்து வெளியேறுவதாகவும், பென்ஸ் பங்குகளை அதன் முதலீட்டாளர்களுக்கும், உப நிறுவனங்களுக்கும் விற்க பென்ஸ் முடிவு செய்துள்ளது. ரஷ்ய மக்கள் மத்தியில் பென்ஸ் கார்கள் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் பென்ஸின் இந்த நடவடிக்கை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பென்ஸ் நிறுவனமும் கமாஸ் நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட ஒப்பந்தங்கள் ரத்தாகும் நிலையில் அந்த வணிகம் பாதிக்கப்படாது என்றும் டைம்லர் டிரக் நிறுவனத்துக்கு இந்த பங்குகள் மாற்றப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா-உக்ரைன் போரில் அமெரிக்கா நேரடியாக சண்டையிடாமல் உக்ரைனிடம் ஆயுதங்களை கொடுத்து சண்டையிட சொல்வது குறிப்பிடத்தக்கது அர்த்தமற்ற முறையில் நடந்து வரும் போரால் உலகின் பல்வேறு நாடுகளிலும் உணவுப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உணவுப்பஞ்சத்தால் மக்கள்
தவித்து வரும் சூழலும் ஏற்பட்டுள்ளது. எனினும் ரஷ்ய போர் ஓய்ந்தபாடில்லை.. முன்னணி நிறுவனங்களின் வெளியேற்றம், வர்த்தக தடை அதிகரிப்பு என ரஷ்யா ஒதுக்கப்பட்டாலும் ரஷ்யாவிடம் நிதி இல்லாமல் போய்விடவில்லை. போரும் நீண்டுகொண்டே செல்கிறது..